பிரபல ‘ஒன் டைரக்‌ஷன்’ பாடகர் லியாம் பெய்ன் திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
லியாம் பெய்ன்
 

 


பிரபல பாப் இசை பேண்ட்களில் ஒன்றான ‘ஒன் டைரக்‌ஷன்’ குழுவின் பாடகர் லியாம் பெய்ன் 3வது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்ததாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது31. பாடகர் லியாம் பெய்ன் திடீர் மறைவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

லியாம் பெய்ன்

பாப் உலகில் பிரபலமான இசை பேண்ட்களில் ஒன்று ‘ஒன் டைரக்‌ஷன்’. கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட இந்த பேண்டு குழுவில் லியாம் பெய்ன், ஹாரிஸ் ஸ்டைல்ஸ், ஜெய்ன், லூயிஸ், நியால் ஹாரன் ஆகிய 5 பேர் இருந்தனர். 

இவர்களது பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பேண்டில் மிகவும் பிரபலமானவர் லியாம் பெய்ன். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த பேண்டில் இருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது. ஆனாலும் ஒன் டைரக்‌ஷன் பேண்டின் அடையாளமாக அவர் திகழ்ந்தார்.

இவர் கேத் கேசிடி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 30ம் தேதி அர்ஜெண்டிவாவுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். அதன்பிறகு, கேத் கேசிடி சொந்த வேலைகள் காரணமாக கிளம்பி விட்டார். அவர் சென்ற பிறகு போனோஸ் ஏர்ஸ் நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்தார் லியாம் பெய்ன். 

லியாம் பெய்ன்

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இது எதிர்பாராமல் நடந்த விபத்தா அல்லது கொலையா என வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் ஹோட்டல் நிர்வாகத்தினரிடமும், ஊழியர்களிடமும்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!