அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு!

 
அயோத்தி ராமர்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில்  புதிதாக ராமர் கோவில் மிக பிரம்மாண்டமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து  ஜனவரி 22ம் தேதி வெகு விமரிசையாக திறப்பு விழா நடைபெற்றது. உலகிலேயே அதிக பக்தர்கள் வந்து குவியும் திருப்பதிக்கு போட்டியாக அயோத்தியிலும் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.  உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில்   சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

அயோத்தி


கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும்  போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.  கோவிலை பொறுத்தவரை  அதிகாலை 4 மணிக்கு தினசரி பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொதுதரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து தொடங்குகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஓய்வின்றி  தரிசன நேரம்  இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 

அயோத்தி
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் தினமும்  பிற்பகல் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. இது குறித்து   அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அயோத்தி ராமர் 5 வயதேயான சின்னஞ்சிறு பாலகன். இத்தனை நேரம் கண்விழித்து பக்தர்களுக்கு தரிசனம் தருவதால் அவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.  இந்த அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. எனவே குழந்தை ராமருக்கு ஓய்வு கொடுக்க, கோவிலின் கதவுகளை சிறிது நேரம் மூடலாம் என  அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதன்படி தினமும் பிற்பகல்  12.30 மணி முதல் 1.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் அதன் பிறகு வழக்கம் போல் தொடர் பூஜைகள் நடைபெறும் எனத்   தெரிவித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web