நிலக்கரி சுரங்க சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி... !

 
நிலக்கரி சுரங்க விபத்து

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் சுவர் இடிந்து எண்ணெய் டேங்கர் லாரி மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் டேங்கர் திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்திற்குள் சென்றபோது, பக்கவாட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதன் தாக்கத்தில் லாரி கவிழ்ந்தது. அப்போது அருகில் நின்றிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சுவரின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநரும் துப்புரவாளரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் பலியானோரின் குடும்பத்துக்கு நிதியுதவியையும், குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!