இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் மறியல் போராட்டம்!!

இன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில்வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்து அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் "மோடி ஆட்சியின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும், வரலாறு காணாத விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைவருக்கும் வேலை வழங்கிட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்யின் சார்பில் இன்று ஒரு நாள் மட்டும் செப்டம்பர் 7ம் தேதி ரயில் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.
தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் காலை 10.30 மணிக்கு கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெறும் மறியலில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதில் வடசென்னை மாவட்டக்குழு சார்பில், மூலக்கடை, யூகோ வங்கி முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எல். சுந்தரராஜன் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மத்திய சென்னை சார்பில் அண்ணாசாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாவட்ட செயலாளர் ஜி. செல்வா உட்பட தோழர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!