பகீர்... பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி!! சுகாதாரத் துறை எச்சரிக்கை!!

 
பன்றிக்காய்ச்சல்

காற்று காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க உள்ளது. மழைக்கால முன்னேற்பாடுகளை மாவட்ட , மாநில நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன. அதே நேரத்தில் மழைக்கால நோய்கள் குறித்தும் தடுப்பு முறைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூரில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார்.

பன்றிக் காய்ச்சல்

இவருக்கு வயது 59. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன் நுரையீரல் பிரச்சனை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று விடியற்காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.  

பன்றிக் காய்ச்சல்


நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன . அதில் அவருக்கு  பன்றிக்காய்ச்சல் இருப்பதகா  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவர் வசித்து வந்த வீடு மற்றும் அப்பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அத்துடன் அவர் நடத்தி வந்த கடையை  5  நாட்களுக்கு தொடர்ந்து மூட நகராட்சி ஆணையாளர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web