பெரும் அதிர்ச்சி.. மெட்ரோ சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி.. பலர் படுகாயம்..!
தலைநகர் டெல்லியில் உள்ள கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தின் பக்கவாட்டுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் பயணம் செய்த வினோத்குமார் (வயது 53) உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வினோத்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்போது காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ சாலை மூடப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் ஏராளமானோர் இருந்தனர். விபத்துக்குப் பிறகு, இப்போது மெட்ரோ ரயில் இந்த வழித்தடத்தில் ஒற்றைப் பாதையில் இயக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என டிஎம்ஆர்சி அறிவித்துள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க