சபரிமலை மண்டல பூஜை தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்... !!

 
சபரிமலை

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே திரும்பும் திசையெல்லாம் ஐயப்ப கோஷங்கள். ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து கூட்டம் கூட்டமாக பஜனை பாடி செல்வர்.  பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பனை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி  செல்வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.  தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டி முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் தரிசனத்துக்கு  எந்த வித கட்டுப்பாடுகளும் கிடையாது.  

சபரிமலை

அதே நேரத்தில் நேரடியாக நிலக்கல் வந்து உடனடி தரிசன முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது ஒரு நாளைக்கு தினமும் 10000 பக்தர்கள்  முன்பதிவு செய்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தற்போது 17 மணி நேரம் நேரம் சபரிமலையில் நடை திறந்து வழிபாடு நடக்கிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், நடை திறப்பு நேரத்தை 18 மணி நேரமாக நேரமாக அதிகரிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதன்படி தினமும் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை நடை அடைக்கப்பட்டு வருகிறது. இதனை ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது 3 மணிக்கு நடை திறந்தால்  கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.  

சபரிமலை

டிசம்பர் 27ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.  மீண்டும் டிசம்பர் 30ம் தேதி விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு  ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2024 ஜனவரி 15ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்நிலையில்  மகர விளக்கு கால பூஜைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் வழக்கம் போல சபரிமலையின் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web