நிஃபா வைரசுக்கு ஆன்லைனில் சிகிச்சை !!

 
நிஃபா வைரஸ்

தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. அங்கு  இதுவரை,  6 பேருக்கு பாதிப்பு உறுதியாகி  அதில், இருவர் உயிரிழந்தனர். வைரஸ் பரவலை தடுக்கவும், பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகிறது.

நிஃபா
மருத்துவமனைகளில் நிஃபா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிகப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 'இ - சஞ்சீவினி' எனப்படும் தொலைபேசி  மூலம் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ், நிபாவுக்கான ஆன்லைன் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.   காலை 8 மணி முதல்   மாலை 5 மணி வரை, ஆன்லைன் மூலம்  சிகிச்சை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமலேயே மருத்துவர்களின்    ஆலோசனையை பெற முடியும். மேலும் நிபா வைரஸ் தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற முடியும்.

எச்சரிக்கை!! நிஃபா வைரஸ் எப்படி பரவுகிறது?!  மருந்தும் கிடையாது! தடுப்பூசியும் கிடையாது!!
இந்நிலையில், கடந்த  2 நாட்களாக புதிய பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை. நேற்று முன்தினம், 42 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், அவர்களில் ஒருவருக்கு கூட நிஃபா வைரஸ்  பாதிப்பு இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன.  இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் ” கோழிக்கோட்டில் கடந்த   2 நாட்களாக புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை. நடைமுறைகளின்படி, கடைசியாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தினத்தில் இருந்து, 42 நாட்கள் வரை தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன “ எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web