அச்சச்சோ... மக்களே உஷார்... செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருக்கும் சென்னைவாசிகள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விதமாக செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் முழுவதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வின் தாக்கத்தால் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை 4 மணிக்கு ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட இருப்பதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் முழுக் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர்மட்டம் 21 அடியை நெருங்கியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உபரி நீரை கட்டுப்பாட்டுடன் வெளியேற்றி வெள்ள அபாயத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.
இதன்படி முதற்கட்டமாக 100 கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்படும். இந்த நடவடிக்கையையடுத்து குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் நேரங்களில் மழை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
