அச்சச்சோ... பிரேக் பழுது... பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பாதிவழியில் நிறுத்தம்!
இன்று காலை சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இது குறித்து விசாரிக்கையில், பல்லவன் விரைவு ரயில் பிரேக் பழுது காரணமாக பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. காரைக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியின் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்தப் பெட்டியின் பகுதியில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இந்த பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுது சரிசெய்யப்பட்டு அதன் பின்னர் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காலை சென்னையில் அலுவலகத்திற்கு செல்வோர் என பலரும் அதிகாலையில் கிளம்பும் இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயணித்து வரும் நிலையில், நடுவழியில் நிறுத்தப்பட்டதால் கடும் அவதியடைந்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!
