கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் திறப்பு... செல்ஃபி எடுத்து அசத்திய ஆட்சியர்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடைபெற்றது.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில் குலசேகரபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 72 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு தெரு விளக்கு, குடிநீர் தொட்டி, சாலை வசதி, குடிநீர் குழாய் உள்பட அடிப்படை வசதிகள் ரூ. 88.22 லட்சம் மதிப்பில் செய்து தரப்பட்டன. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட 72 வீடுகளும் இன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்இளம்பகவத் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சித்துறை) ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

பின்னர் கல்வெட்டையும் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், 2024 25ஆம் மாவட்டத்தில் 1673 வீடுகள் கட்டப்பட்டது. அதில் 72 வீடுகள் குலசேகரபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. 2025-2026 ஆம் நிதி ஆண்டில் மாவட்டத்தில் 1700 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள்,, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் செல்பி எடுத்து அசத்தினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
