‘ஆபரேஷன் சிந்தூர்’ — 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்... இந்திய ராணுவம்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மே 7ஆம் தேதி நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 12க்கும் மேற்பட்ட விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய இந்திய ராணுவத்தின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், “பாகிஸ்தானின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ராணுவ விருதுகள் இதை வெளிப்படுத்துகின்றன. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நமது தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிந்தன. தேவைப்பட்டிருந்தால் கடற்படையும் இணைந்திருக்கும்” எனக் கூறினார்.

மே 10ம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிரான மிகப் பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகளும் 96 நாட்களுக்குப் பிறகு அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
