ஓபிஎஸ் சை நீக்கியது செல்லும்..!! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

 
இபிஎஸ்

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது.இபிஎஸ் தலைமையில் நடத்திய பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.  அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட  4 பேர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் இபிஎஸ்க்கு   ஆதரவாக  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இபிஎஸ்

இந்த   வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக்  அடங்கிய அமர்வு இன்று காலை இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.   ஏற்கனவே அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன்படி பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது.

இபிஎஸ்

ஓபிஎஸ்  ஆதரவாளர்களை  கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானம் செல்லும். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டதும் செல்லும். தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதனால்  ஓபிஎஸ் உட்பட  4 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web