10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.... வீட்டை விட்டு வெளியே வராதீங்க...

தமிழகத்தில் நவம்பர் மாத தொடக்கம் முதலே வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணாமாக இன்னும் சில நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் உருவான மிதிலி புயல் காரணமாகவும் தமிழகத்திற்கு கனமழை பெய்தது. அடுத்து தற்போது இன்னொரு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி அதாவது, குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய கூடும். இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும் கனமழை பெய்ய கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், தேனி என 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!