6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 17) ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழையும், மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். இதேசமயம், தமிழக கடலோரம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
