அக்டோபர் 27ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, வருகிற அக்டோபர் 27ஆம் தேதி புயல் உருவாகி கடலோரப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
HEAVY RAINFALL WARNING FOR DAY 3 to DAY 5 pic.twitter.com/ieCwhJhm2y
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 24, 2025
அதன்படி, சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று (அக். 24) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், நாளை (அக். 25) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 26ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கும், அக்டோபர் 28ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
