பத்திரமா இருங்க மக்களே... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!

 
ஆரஞ்சு

வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்புயல் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் காரணமாக வட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தீவிரமடையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக மக்களே உஷார்!! மீண்டும் ஒரு புயல் சின்னம்!!

நேற்று மாலை முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. பல சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான மழையால் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளிலேயே தங்கியுள்ளனர். இதனால் தினசரி வாழ்க்கை இயல்பை இழந்துள்ளது.

புயல்

இந்த நிலைமையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின் மழை படிப்படியாக குறையும் என வானிலை மையம் எதிர்பார்க்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!