ரூ.82,000 கோடிக்கு ஆர்டர் புக்... விண்வெளி பாதுகாப்பு நிறுவனத்தில் கொட்டுது வருமானம்!

 
ஹெலிகாப்டர் பாதுகாப்பு விண்வெளி

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், விண்வெளி மற்றும் பாதுகாப்பின் முன்னணி உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. பொதுத்துறை நிறுவனமான இந்திய கடலோர காவல்படைக்கு (ஐசிஜி) இரண்டு டோர்னியர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. சுமார்  458.87 கோடி மதிப்பில்லான ஆர்டர் இது விமானம் வாங்க எனச்சொல்லப்படுகிறது, இந்த விமானத்தில் கண்ணாடி காக்பிட், கடல் ரோந்து ராடார், எலக்ட்ரோ-ஆப்டிக் இன்ஃப்ரா-ரெட் சாதனம், மிஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பல மேம்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்த விமானத்தின் பொறுப்புகளின் கடல் பகுதிகளின் வான்வழி கண்காணிப்பு திறனை மேலும் மேம்படுத்தும். 

ஹெலிகாப்டர்

எச்ஏஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் கூட்டம் ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது, நிறுவனத்தின் பங்குப் பங்குகளின் துணைப்பிரிவு/பங்கு பிரிப்புக்கான முன்மொழிவு நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 61 (1)(d) இன் விதிகள் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. Q4FY22 உடன் ஒப்பிடும்போது Q4FY23ல் நிகர விற்பனை 8.10 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 12,495 ஆக இருந்தது. நிகர விற்பனை 9.37 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 26,927 கோடியாகவும், நிகர லாபம் 14.25 சதவிகிதம் அதிகரித்து 5,828 கோடி ரூபாயாகவும் உள்ளது.

புதிய உற்பத்தி ஒப்பந்தங்கள் மற்றும் ஸ்பேர் ஆர்டர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தில் இருந்து தொடர்ந்து பட்ஜெட் ஒதுக்கீட்டின் மூலம் ஆர்டர் புத்தக நிலை ரூபாய் 81,784 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இருப்பு நிலை ரூபாய் 20,306 கோடியாக உயர்ந்துள்ளது. மேற்கண்ட ஆர்டரையும் சேர்த்து, நிறுவனத்தின் ஆர்டர் புத்தகம் ரூபாய் 82,000 கோடிக்கு மேல் உள்ளது.

விண்வெளி விமானம் பாதுகாப்பு

வெள்ளியன்று, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பங்குகள் அதன் முந்தைய முடிவான ரூபாய் 3,731.40ல் இருந்து 0.74 சதவீதம் உயர்ந்து ரூபாய் 3,8758.95 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது பிற்காலங்களில் அதிக பலன் கொடுக்கும் என தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள். ஒரு வருடத்தில் 120 சதவிகிதமும், இரண்டு ஆண்டுகளில் 250 சதவிகிதமும், மூன்று ஆண்டுகளில் 350 சதவிகிதத்திற்கு மேல் பங்குகள் விலை உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் இந்த மல்டிபேக்கர் லார்ஜ்-கேப் பங்கினை தங்கள்  கண்காணிப்பு வளையத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள் அப்புறம் ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி உயர்ந்து கொண்டே இருந்தால் வேடிக்கையா பார்க்க முடியும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web