சிறுவன் லாக் அப் மரணம்.. ரூ25லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

 
இழப்பீடு

மதுரை கோச்சடையில் வசித்து வருபவர்  ஜெயா  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை  தாக்கல் செய்துள்ளார். தில்  2019ல் நடந்த நகை திருட்டு குறித்து  எஸ்.எஸ்.காலனி போலீஸார் எனது 17 வயது மகனை விசாரணைக்காக  அழைத்து சென்றனர்.  காவல்நிலையத்தில் நகையைத் திருடியதாக ஒப்புக்கொள்ளும்படி எனது மகனை போலீஸார் நிர்பந்தித்துள்ளனர்.   அவனை சில நாட்கள் தங்கள் பொறுப்பில் வைத்திருந்து துன்புறுத்தியதுடன் அவன் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர். 

உயர்நீதிமன்றம்


 2019 ஜனவரி 24ல் என் மகன் இறந்து விட்டார் . இச்சம்பவம் குறித்து விசாரிக்க  சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.  இந்த விசாரணையில்  போலீஸாருக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எங்களுக்கு ரூ 50 லட்சம் இழப்பீட்டுடன், எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க  வேண்டும் என கோரியிருந்தார்.
ஆனால் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தனபால், மனுதாரர் குடும்பம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற தகுதி உண்டு.

உயர்நீதிமன்றம் 10 நாட்கள் விடுமுறை!!

ஏற்கனவே அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்கிய நிலையில்  பாக்கி  20 லட்சத்தை அரசு வழங்க வேண்டும்.  போலீஸார் மீதான வழக்கு இன்னமும்  நடைபெற்று வரும் நிலையில் அதன் இறுதி முடிவை பொறுத்து இழப்பீடு தொகை  யாரிடம் வசூலிப்பது என அரசு முடிவெடுக்கப்படும்.  அத்துடன் அரசு வேலை கொடுப்பது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது. தமிழக  உள்துறை செயலாளர் தான் முடிவெடுக்க இயலும் எனக் கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web