நெகிழ்ச்சி.. இன்று இந்தியாவிலேயே முதன் முறையாக உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!!

 
உடல் உறுப்பு தானம்

 இறந்தபின் உடல் உறுப்புக்கள் தானம் செய்பவர்களுக்கு இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் முதல்வருக்கு குவிந்தன.

உடல் உறுப்பு தானம்

 இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவிற்கு  இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இவருடைய இறுதி சடங்கில்   அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கலந்து கொள்ள இருக்கிறார்.  செப்டம்பர் 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வடிவேலு மூளைச்சாவு அடைந்தார், இதனையடுத்து  அவரது குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை  தானமாக தர முன் வந்தனர்.  

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்  “உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த தேனி செல்கிறோம். இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது” எனக் கூறியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web