அடுத்த அதிர்ச்சி... உளுந்து, நல்லெண்ணெய் விலை உயர்வு!!
காலையில் எழுந்ததும் வாங்குகிற பால் தொடங்கி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் நடுத்தரவர்க்கத்தினர் செய்வதறியாது திகைத்து கலங்கி தவிக்கிறனர். இனி வரும் காலம் பண்டிகை காலம். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என வரிசையாக அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் உளுந்து, பாசிப்பயறு, நல்லெண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலையும் விறுவிறுவென உயர்ந்து வருகிறது.
விருதுநகர் மார்க்கெட்டில் ரூ.9,800க்கு விற்ற 100 கிலோ உளுந்து லயன் ரகம் ரூ.700 அதிகரித்து ரூ.10,500க்கும், ரூ.6765க்கு விற்ற நல்லெண்ணெய் 15 கிலோ தும்பை ரூ.660 அதிகரித்து ரூ.7425க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் துவரம் பருப்பு 100 கிலோ ரூ.15,500ஆக இருந்தது தற்போது ரூ.1000 அதிகரித்து, ரூ.16,500க்கும், ரூ.9,000ஆக இருந்த 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.1000 விலை உயர்ந்து ரூ.10,000க்கும் விற்கப்பட்டு வருகிறது.அதே போல் சர்க்கரை 50 கிலோ ரூ.20 அதிகரித்து ரூ.2,040ஆகவும், மைதா 90 கிலோ பை ரூ.4420, 55 ஆகவும் பொரிகடலை ரூ.4900லிருந்து ரூ.200 அதிகரித்து ரூ.5,100 ஆகவும், கொண்டைக் கடலை 100 கிலோ ரூ.7000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
துவரம் பருப்பு 100 கிலோ வகை ரூ.13000 ஆக இருந்தது ரூ.16500க்கும், நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.500 அதிகரித்து ரூ.10,200க்கும், பாசிப் பருப்பு ரூ.500 அதிகரித்து ரூ. 11,000, 100 கிலோ வெள்ளை பட்டாணி ரூ.6,500 க்கும், பட்டாணி பருப்பு ரூ100 அதிகரித்து ரூ.6,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.காய்ந்த மிளகாய் நீட்டு 100கிலோ ரூ18000லிருந்து ரூ21000ஆக அதிகரித்துள்ளது. குண்டு வத்தல் ரூ24000லிருந்து ரூ26000க்கும், மல்லி ரூ2800லிருந்து ரூ3100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மொத்த விலை என்பதால் சில்லறை விற்பனைக் கடைகளில் மேலும் அதிகரிக்கக்கூடும். இந்த திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!