7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘ஓப்பன்ஹெய்மர்’... குவியும் வாழ்த்துக்கள்!

 
ஆஸ்கர் 2024


கடந்த 8 வருடங்களாக ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டு, விருது வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்ட நோலன், இம்முறை சொல்லி வைத்தாற் போல 7 விருதுகளை அள்ளியிருக்கிறார். யெஸ்... இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் பிரிவுகளில் ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அதிகாலை 4 மணி முதலே தொடங்கியது. ’ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் அதிக விருதுகளை வெல்ல வேண்டும் என நோலன் ரசிகர்கள் இணையத்தில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர். அவர்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தியாக்கும் விதத்தில், பல்வேறு பிரிவுகளில் ’ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் விருதுகளை வென்று குவித்துள்ளது.


அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் திரையுலக ரசிகர்களைக் கவர்ந்தது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது ’ஓப்பன்ஹெய்மர்’. கற்பனைக்கும் அப்பாற்பட்டப் படங்களை இயக்குவதற்குப் பெயர் போன இயக்குநர் நோலன் வெல்லும் முதல் ஆஸ்கர் விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இடம், தேதி அறிவிப்பு!
“அகாடெமி நூறு ஆண்டுகளை நெருங்குகிறது. இத்தனை வருடங்களில் எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கும். இந்த நம்பமுடியாத பயணம் இங்கிருந்து எங்கு செல்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நான் அதில் ஒரு அர்த்தமுள்ள பகுதி என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த விருதும் அதைத்தான் உணர்த்துகிறது. இது எனக்கு இந்த உலகத்தில் எதை விடவும் பெரிது” என்று நோலன் உருக்கமாக பேசினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web