உஷார்.. நிரம்பி வழியும் டெங்கு வார்டுகள்.... அச்சத்தில் பொதுமக்கள்...!!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில்  மதுரையில்  கடந்த சில நாட்களாக தொடர்  மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு அடைந்து   கொசுத் தொல்லையும் அதிகரித்து வருகிறது.  
மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல்   பாதிப்புகள் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள்  காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல்  பாதிப்புகளால்   சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையில் கடந்த வாரத்தில் மட்டும் 17 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மருத்துவமனையில்  அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள்  கண்காணிப்பில் தொடர்சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.   இதே போல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு தினமும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முக்கிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன்  டெங்கு விழிப்புணர்வு குறித்த தகவல்களை அளிக்கவும்  ஏற்பாடு செய்துள்ளது. வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web