கவிழ்ந்த பள்ளிப் பேருந்து... 10 மாணவர்கள் படுகாயம்!! கதறித் துடித்த பெற்றோர்!!

 
கவிழ்ந்த பேருந்து

பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் மற்ற வாகனங்களை காட்டிலும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் ஓட்டி செல்ல வேண்டியது அவசியம் என எத்தனை அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்ட போதிலும் திடீர் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த வகையில் கடலூரில் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம்  பெரியப்பட்டு பகுதியில் பரணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  சுற்றுவட்டாரங்களில் வசித்து வரும் சுமார்  1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களை பள்ளிப் பேருந்து அவர்களின்  கிராமத்திற்கே சென்று பள்ளி வேனில் அழைத்து வருவது வழக்கம்.

கவிழ்ந்த பேருந்து


வழக்கம் போலவே இன்றும்   பள்ளி வேன் பெத்தாங்குப்பம் மலைப்பகுதி தாண்டி கிராமத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. குறுக்கே   ரயில்வே கிராஸ்ஸிங் இருப்பதால் ரயிலை கடக்க முயன்றபோது ரயில் வருவதை அறிந்த ஓட்டுநர் தண்டவாளத்தை கடப்பதற்கு முன்னதாக பள்ளி வேனை நிறுத்திவிட்டார்.    வேனை நிறுத்திவிட்டு தொலைபேசி எடுத்துக்கொண்டு கீழே இறங்கி சென்ற நிலையில் பள்ளி வேனில் விளையாடிக் கொண்டிருந்தன. பள்ளிக்குழந்தைகள் எதிர்பாராத விதமாக கியர் பாக்சில் கை வைத்ததால் அந்த வேன் பின்புறமாக நகர்ந்து சென்று தண்டவாளம் அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது .  

கவிழ்ந்த பேருந்து

இந்த விபத்தில் முற்றிலுமாக வேன் கதவுகள் அடைத்து மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் படுகாயம் அடைந்து சிக்கி கொண்டனர். குழந்தைகளின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து  வேனின் கண்ணாடியை உடைத்து அந்த குழந்தைகளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தின் அருகே ஓட்டுனரில் அலட்சியத்தால்  விபத்து ஏற்பட்டுள்ளது . தகவல் அறிந்த பெற்றோர்கள் கதறி துடித்த படி மருத்துவமனை வந்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்தது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web