சொந்த மகளே ஏமாற்றிட்டா... வீட்டை மீட்டுத் தர கோரி வயதான தம்பதியர் மனு!

கும்பகோணம் மாவட்டத்தில், தங்களிடம் இருந்து சொந்த மகளே, தங்களது வீட்டை ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டதாகவும், மகளிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரவேண்டும் என கோரி, வயதான தம்பதியர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்துள்ள கும்பகோணம் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவலைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (70). விவசாயியான இவரது மனைவி சகுந்தலா (68). ஒரு மகன் ஒரு மகள் என இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், திருமணமான மகன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து விட்டார். மகள் விமலாதேவி, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 குழந்தைகளுடன் குணதலைபாடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வயதான பெற்றோரைப் பராமரித்துக் கொள்வதாகக் கூறி பன்னீர்செல்வத்தின் மகள் விமலாதேவி, ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டைக் கடந்தாண்டு இனாம் செட்டில்மென்ட் மூலமாக தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்ட விமலாதேவி, அதன் பின்னர், பெற்றோர்களைக் கண்டுகொள்ளாமல், வீட்டைவிட்டும் அவர்களை வெளியேற்றி இருக்கிறார். இதனால் தற்போது கொரநாட்டூக்கரூப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் தம்பதியர் வறுமையில் வாடி வருகின்றனர்.
சொந்த மகளே தங்களை ஏமாற்றி வீட்டையும் அபகரித்துக் கொண்டு, துரத்தி விட்ட கொடுமையை சொல்லி, தங்களது வீட்டை மீட்டுத் தருமாறு பல மாதங்களாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் இதன் மீது எடுக்கப்படவில்லை என்று வயதான தம்பதியர் கதறுகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா