தாய்லாந்தின் 31வது பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ரா தேர்வு... தாய்லாந்தின் இளம்பிரதமராக பெருமை பெற்றார்!

 
தாய்லாந்து
 

தாய்லாந்தின் 31வது பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாய்லாந்தின் இளம் பிரதமராக பெருமையையும் பெற்றார் ஷினவத்ரா. நெறிமுறைகளை மீறியதற்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை தாய்லாந்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.


37 வயதில், தாய்லாந்தின் வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதமராகவும், இளம்பிரதமராகவும் பதவியேற்கவுள்ளார் ஷினவத்ரா. தாய்லாந்து அரசியலில் அவரது தந்தை தக்சின் ஷினவத்ரா மற்றும் அவரது அத்தை யிங்லக் ஷினவத்ரா ஆகியோருக்குப் பிறகு தாய்லாந்து அரசியலில் ஒரு முக்கிய நபராக ஷினவத்ராவின் பங்கை இன்று நடைபெற்ற வாக்கெடுப்பு உறுதிப்படுத்துகிறது.
கீழ்சபையில் 314 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தற்போது 11-கட்சி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பியூ தாய் கட்சி, பேடோங்டரின் நியமனத்தை ஒருமனதாக ஆதரித்தது. பிரதமர் பதவியைப் பெற, அவருக்கு கீழ்சபையிலிருந்து பெரும்பான்மை அல்லது குறைந்தபட்சம் 247 வாக்குகள் தேவை எனும் நிலையில், கூட்டணியின் வலுவான ஆதரவு அவரது தேர்வை உறுதிசெய்ததுடன் கட்சியின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

தாய்லாந்து
வரும் ஆகஸ்ட் 21ம் தேதியன்று 38 வயதாகும் பேடோங்டார்ன், சர்ச்சைக்குரிய மற்றும் பிரபலமான அரசியல் வாழ்க்கைக்காக அறியப்பட்ட முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தின் முக்கிய அரசியல் மரபு இருந்த போதிலும், பேடோங்டார்ன் தனது சுதந்திரத்தை வலியுறுத்தி வந்துள்ளார். அவர் தனது பிரச்சாரத்தில், "இது என் அப்பாவின் நிழல் அல்ல. நான் எப்போதும் என் அப்பாவின் மகள். ஆனால் எனக்கு என் சொந்த முடிவுகள் உள்ளன" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேடோங்டரின் நியமனம் கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!