நாளை முதல் 3 நாட்களுக்கு ஓவியச்சந்தை... !

 
ஓவியச்சந்தை


 
தமிழகத்தின் தலைநகர் சென்னையில்  அரசு கலைத்துறை சார்பில் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுனர்களின் படைப்புகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

ஓவியச்சந்தை
இதுகுறித்த வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், கலை பண்பாட்டுத் துறை மற்றும் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதரம் மேம்படும் வகையில் “சென்னையில் ஓவியச் சந்தை” நடைபெற உள்ளது. அதன்படி நாளை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில்  நாளை ஆகஸ்ட் 3ம் தேதி  முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரையில் 3 நாட்கள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியச் சந்தையில் தமிழகத்தைச் சார்ந்த கலை வல்லுநர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகள் விற்பனைக்காக 100 அரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

ஓவியச்சந்தை
இந்த “ஓவியச் சந்தையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நாளை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு  தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் முதன்முறையாக மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஓவியச் சந்தையை பொதுமக்கள் பார்வையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களும்  தங்களுக்கு விருப்பமான கலைப் படைப்புகளை வாங்கிச் செல்லலாம் என  அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!