பகீர்... தாயை 30இடங்களில் கத்தியால் குத்தி கொலை.. மகள் பரபரப்பு வாக்குமூலம்!!

 
தாய் மகள்

50 வயதாகும் தாய் பிரெண்டாவை அவரது மகள் சிட்னி பவல் கொலை செய்துள்ளார். சிட்னி பவல் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.   2020   மார்ச் மாதத்தில்   தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரெண்டா பவல் சடலமும், பெற்ற மகளே தாயை குத்திக்கொலை செய்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  கல்லூரி மாணவியான சிட்னி பவல் பல்கலைக்கழக நடத்தைகளை மீறியதாக கூறி   கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  

மகள்

இந்த விவகாரம் தனது தாய்க்கு தெரியாமல் சிட்னி மறைத்து வைத்திருந்தார். எனினும் தாய் பிரெண்டா கண்டுகொண்டதோடு, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளார். இதனால் மகள்  ஆத்திரத்தில்  தாயை கொல்ல முடிவு செய்தார்.முடிவு எடுத்த வேகத்தில் சிட்னி, தன் கையில் கிடைத்த இரும்பு வாணலியால் தாயின் தலையில் தாக்கியுள்ளார்.

அமெரிக்கா போலீஸ்

இதில் நிலைகுலைந்த தாயை  சமையலறை கத்தியை எடுத்து சராமாரியாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதனால்  தாய் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓஹியோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தற்போது சிட்னிக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 2 நாளில் தண்டனை  விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!