பகீர்... பாஸ்போர்ட் வெரிபிகேஷன்... இளம்பெண்ணின் தலையில் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்!

 
சிசிடிவி பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக காவல் நிலையத்திற்கு சென்றிருந்த இளம்பெண்ணின் தலையில் தவறுதலாக தன்னுடைய துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் இளம்பெண். உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் அருகே கோட்வாலி காவல் நிலையத்திற்கு, இளம்பெண் ஒருவர் தன்னுடைய பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக சென்றிருக்கிறார். காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா என்பவர், தன்னுடைய சக அதிகாரி வழங்கிய கைத்துப்பாக்கியை, அவரிடமிருந்து மிக அலட்சியமாக வாங்கி, கையாள்கிறார். அப்போது திடீரென துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு எதிரிலிருந்த பெண்ணின் தலையில் பாய்கிறது.


சக  அதிகாரியிடமிருந்து சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா கைக்கு மாறும் கைத்துப்பாக்கியும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு பெண்ணின் தலையில் துளைத்து சாய்ப்பதுமான வீடியோ காட்சிகள் ஸ்லோ மோஷனில் விரிகின்றன. தனது கைக்கு வந்த கைத்துப்பாக்கியின் லாக்கை எஸ்.ஐ மனோஜ் சர்மா காரணமின்றியும், அலட்சியமாகவும் விடுவிப்பது வீடியோ காட்சிகளில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. தலையில் குண்டு பாய்ந்த பெண், கவலைக்கிடமான நிலையில் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய எஸ்ஐ மனோஜ் சர்மாவை போலீஸார் தேடி வருகின்றனர். அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே பாஸ்போர்ட் சரிபார்ப்பு விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணிடம், பணம் கேட்டு போலீஸார் மிரட்டல் விடுத்ததாக, அப்பெண்ணின் உறவினர்கள் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web