பகீர் வீடியோ.. இஸ்ரேல் சிறுவனை துன்புறுத்தும் பாலஸ்தீன சிறுவர்கள்!!

 
இஸ்ரேல்

உலக அளவில்  எந்த மூலையில் போர் மூண்டாலும் அதில் வெகுவாக பாதிக்கப்படுவது பெண்களும், அறியா குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் தான். இன்று நேற்றல்ல. இந்த நடைமுறை ஆதிகாலம் தொட்டு வரலாறுகளிலும்  பதிவாகியுள்ளது. இந்த வன்முறைக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத  பெண்களும், குழந்தைகளும் தான் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்.  அதற்கு தற்போது மூண்டிருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போரும் விதிவிலக்கல்ல என்பதை தான் ஊடகங்கள் காட்டுகின்றன. 

இஸ்ரேல் போர் பிரகடனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில்  புகுந்த பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தொடர் தாக்குதல்களை  நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு  ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருந்துவருகின்றனர். இஸ்ரேல் காசா நகரை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது.   இஸ்ரேலின் எல்லைகள் வழியாக ஊடுருவி, கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர்  , ராணுவ அதிகாரிகள் உள்பட பலரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அதே போல், இஸ்ரேலை சேர்ந்த யூத சிறுவன் ஒருவனை ஹமாஸ் அமைப்பினர் கடத்தி வைத்துள்ளனர்.   அச்சிறுவனை, பாலஸ்தீன சிறுவர்கள் துன்புறுத்துவதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இஸ்ரேல்

ஏற்கனவே இளம்பெண்ணை அரை நிர்வாணமாக்கி திறந்த டிரக்கில்   ஹமாஸ் அமைப்பினர்  இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் உள்ள காசா பகுதிக்குள் கொண்டு செல்லும்  காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அப்பெண்ணின் ஆண் நண்பரையும் அவர்கள் அடித்து அழைத்து செல்கின்றனர். அந்தப் பெண் ‘என்னைக் கொன்றுவிடாதீர்கள்’ எனக் கதறும் காட்சிகளும் பதிவாகி காண்பவர்களை கண்கலங்கச் செய்கிறது.   உலகில் எங்கே போர் ஏற்பட்டாலும் பெண்களும், பெண் குழந்தைகளும்,  சிறுவர், சிறுமியர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web