இலவசமாக தர மறுத்ததால் பானிபூரி கடைக்காரர் அடித்து கொலை... பரபரப்பு... !

 
பானிபூரி

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் தேஹாட்டியில் வசித்து வருபவர்  பிரேம் சந்திரா. இவரது மனைவி  குழந்தைகளுடன் சாகேரியில்  பானி பூரி விற்பனை செய்யும் பணி செய்து வந்தார்.  வழக்கம் போல்  நேற்று முன்தினம் இரவு  கடையில் பானிபூரி விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. திடீரென எங்கிருந்தோ வந்த கும்பல் இலவசமாக பானிபூரி கேட்டது.  பிரேம் சந்திரா, இலவச பானி பூரி வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.  

பானிபூரி

ஆத்திரமடைந்த அந்த கும்பல் பிரேம் சந்திராவை அடித்து துவம்சம் செய்தது.  வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒருவரும் தட்டிக்கேட்கவில்லை. பரிதாபமாக  திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து பிரேம் சந்திரா மயங்கி விழுந்தார். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் ஒன்றுசேர்ந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அத்துடன்  அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தரப்பட்டது.  பிரேம் சந்திரா உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி   நேற்று உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் போலீசார்  பிரேம் சந்திரா உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பானிபூரி

இச்சம்பவம் குறித்து  போலீஸார்  " பிரேம் சந்திராவிடம் உள்ளூரில் வசித்து வரும்   தீரஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து   இலவசமாக பானி பூரி கேட்டுள்ளார். தர மறுத்ததால் அவர்கள் பிரேம் சந்திராவை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்துள்ளனர்.  சக்கேரி காவல் நிலைய ஆய்வாளர் " இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேம் உடலில் எந்த காயங்களும் காணப்படவில்லை. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.  இலவசமாக பானி பூரி வழங்க மறுத்த கடைக்காரர் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கான்பூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web