பதறிய பயணிகள்... பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.. 20 பேர் காயம்!
திருச்சி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்றி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

கிழக்குவாடி பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, பேருந்தின் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல பேருந்தின் ஓட்டுநர் முயன்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.

அவர்களை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
