அதிர்ச்சி... 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை 8 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்!!

 
கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

மதுரை மாவட்டம் பேரையூர் சந்தையூரில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. கோவையில் வசித்து வரும் செல்வக்குமார்  அந்தப் பகுதியில் பணிக்கு  சென்ற போது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு   சிறுமி கர்ப்பமானார்.இந்நிலையில் சிறுமிக்கு ஆகஸ்ட் 7ம் தேதி  ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தடுப்பூசி போட கிராம செவிலியர் காந்திமதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற போது குழந்தை அங்கு இல்லை.

போலீஸ்

இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது, குழந்தையை தனது தாயாரிடம் கொடுத்து விட்டதாக கூறினார்.  தாயாரும் குழந்தை குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இது குறித்து   செவிலியர் காந்திமதி பேரையூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையைத் தேடி வந்தனர்.  சிறுமியின் குழந்தையை வளர்ப்பதை அவமானமாக கருதி உசிலம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர்   மூலம் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளனர்

கைது


கார்த்திக், பெங்களூரை சேர்ந்த கார்த்திகேயன், சீனிவாசன் ஆகியோர் மூலம் பெங்களூரில் வசித்து வரும் எல்.ஐ.சி ஊழியர் தேஜேஸ்வரியிடம் ரூ.8.20 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்துள்ளார். இத்தகவல்கள் அடிப்படையில்  குழந்தையின் தாய், சுந்தரலிங்கம், தேஜேஸ்வரி, கார்த்திகேயன், சீனிவாசன் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குழந்தையும் மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web