அதிர்ச்சி... காலை உணவுத்திட்டத்தை புறக்கணிக்கும் பெற்றோர்கள்!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் சமையலர் பணியில் அமர்த்தப்பட்டுள்லார். இவர் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் .இதனால் அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் பட்டியலினப் பெண் பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை திடீரென நேரில் ஆய்வு செய்தனர். அதே நேரத்தில் பட்டியலின பெண் சுமதி சமைத்த உணவை மாவட்ட ஆட்சியர் சாப்பிட்டு பார்த்தார். அதன்பிறகு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பெற்றோர்கள் பட்டியலினப் பெண் சமைத்தால் எங்கள் குழந்தை சாப்பிட முடியாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து கோபம் அடைந்த மாவட்ட ஆட்சியர் எதிர்ப்பு தெரிவித்தவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருதரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதன்பிறகு பெற்றோர்கள் மாணவ, ஆசிரியர்கள் கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!