கர்ப்பிணியை கொலை செய்து ஆற்றில் வீசிய பெற்றோர்!! அதிர்ச்சி வாக்குமூலம்!!

 
பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள கோய்லா கிராமத்தில்  பெற்ற மகளை அதுவும் கர்ப்பமாக இருக்கும் போது கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஆகஸ்ட் 26ம் தேதி இளம்பெண்ணின் உடல் ஆற்றில் மிதந்தது. இது குறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த பெண் 8 மாத கர்ப்பிணி, அவர் கழுத்தைநெரித்து கொலை செய்யப்பட்டார்.

கர்ப்பிணி

அதுவும் அவரின் பெற்றோரோ இந்த கொடுமையை செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.    இளம்பெண்ணின் பெற்றோரிடம் போலீஸார் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக  பதில் அளித்தனர். கிடுக்கிப்பி  விசாரணை நடத்திய போது, மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டனர். இதுகுறித்து காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில்  " கொலை செய்யப்பட்ட இளம்பெண்,  அக்டோபர் 2022ல் தனது காதலன் ராகுலுடன் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார்.  டிசம்பரில்   போலீஸாரால்   கண்டுபிடிக்கப்பட்டு ராகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடத்தல் மற்றும் பலாத்காரம்  குறித்த இந்த வழக்கு முசாபர்நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

போலீஸ்


இந்த வழக்கின் விசாரணயில்   காதலுனுக்கு எதிராக நேற்று முன்தினம் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என   பெற்றோர்கள் வலியுறுத்தினர். இளம்பெண்  அதை அவர் ஏற்கவில்லை.  ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், கர்ப்பிணி என்றும் பாராமல்  மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஆற்றில் வீசியுள்ளனர்" எனக் கூறியுள்ளனர். கர்ப்பிணி மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை