கட்சி நிர்வாகி அயன் பாக்சால் அடித்து கொலை... பரபரக்கும் கன்னியாகுமரி... !

 
கட்சி நிர்வாகி

கன்னியாகுமரி மாவட்டம், மைலோடு அருகே மடத்சுவிளை பகுதியில் வசித்து வருபவர்  சேவியர் குமார். இவர்   நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக  இருந்தவர். இவருக்கு வயது 45.   அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காகவும் பணிபுரிந்தவர் .  இவரது மனைவி ஜெமீலா  மதர் தெரசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜெமீலாவை பள்ளி நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்தது. இது குறித்து   சேவியர்குமார் வாட்ஸ்அப் குழுக்களில் ஆலய பங்குத்தந்தை குறித்து அவதூறு பரப்பிவந்தார்.  

அடித்தே கொலை

இதுகுறித்து பேசுவதற்காக சேவியர் குமாரை தூய மிக்கேல்  பங்குதந்தை இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.  அங்கு சென்ற போது   சேவியர் குமாரிடம் பங்குத்தந்தை ராபின்சன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அந்த  தகராறில் சேவியர் குமார் இஸ்திரி பெட்டி, பூந்தொட்டியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.   நாம் தமிழர் கட்சியினர் இச்சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவல்துறை உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் உடலை எடுக்க விடுவோம் என கூறி தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.  பேச்சுவார்த்தைக்கு பிறகு  இன்று அதிகாலை 1.45 மணிக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்
இந்நிலையில்  சேவியர்குமார் மனைவி ஜெமீலா, ," நாங்கள் மயிலோடு ஆலயத்தில் உறுப்பினர்கள் .  வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக என் கணவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர்.  இந்த புகார் அளித்தும் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து என் கணவரைக் கொலை செய்து   விட்டனர்.எனவே, என் கணவரை தாக்கிக் கொலை செய்த விவகாரத்தில் பாதிரியார் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  இதன்பேரில் ரமேஷ் பாபு உட்பட 15 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!