மசோதாக்களுக்கு ஒப்புதல்.. குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 
ஜனாதிபதி முர்மு

மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்று அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் தரும் ஒப்புதலில் தாமதம் ஏற்படுவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரணையில் இருந்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் முறையை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரி தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், மசோதாகுகள் மீது ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் போது காலக்கெடு அவசியம் என்ற கோணத்தில் உச்சநீதிமன்றம் முன்பு முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விவகாரம் குறித்து மொத்தம் 14 முக்கிய கேள்விகளை எழுப்பினார். மசோதாக்கள் எத்தனை நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட வேண்டும்? மறுப்பு தெரிவிக்கும்போது எந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும்? மாநிலங்கள் அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் ஏன் நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கிறார்கள்? போன்ற பல நடவடிக்கை சார்ந்த கேள்விகள் குடியரசுத் தலைவரின் முன்மொழிவுகளில் இடம்பெற்றிருந்தன.

திரௌபதி முர்மு

இந்த கேள்விகளை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வை அமைத்து விசாரணை மேற்கொண்டது. பல நாட்கள் நடந்த விசாரணைக்கு பின், இன்றே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. மாநில அதிகாரங்கள் மற்றும் மத்திய நிர்வாகம் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த சட்டப்பூர்வ குழப்பங்களை இந்த தீர்ப்பு தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரௌபதி முர்மு

இது மட்டும் அல்லாமல், இந்த தீர்ப்பு மிகுந்த கவனத்தை ஈர்க்கும் இன்னொரு காரணம், அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகித்து வரும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் நாளை (நவம்பர் 21) கடைசி பணிநாளை எதிர்கொள்வது தான். நவம்பர் 23 அன்று அவரது பதவிக்காலம் முடியும் நிலையில், ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்படுவதால், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இருக்கும் என்று சட்ட வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

மசோதாக்களின் ஒப்புதல் செயல்முறையில் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் விதமான வழிகாட்டுதல்கள் இதில் இடம்பெறுமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?