தீபாவளிக்காக ரயில் முன்பதிவு இணையதளம் முடங்கியதால் பயணிகள் ஏமாற்றம்!

 
தீபாவளி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதனையொட்டி பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சித்த போது ஐஆர்சிடிசி இணையதளம் அதிகப்படியான பார்வையாளர்களால் முடங்கி நின்றது. இதனால் முன்பதிவு செய்ய முயன்ற பயணிகள் பெரும் ஏமாற்றத்தை அனுபவித்தனர்.

நாளை சனிக்கிழமை அக்டோபர் 18ம் தேதியில் பயணிக்க திட்டமிட்ட பயணிகள் இன்று காலை 11 மணிக்குள் தட்கல் முன்பதிவுக்கு முயற்சி செய்ததால் இணையதளம் செயல்படாமல் போயிருந்தது. முன்பதிவு செய்ய முடியாமல் தவித்த பயணிகள் சிக்கலான சூழ்நிலைக்கு ஆளானனர்.

ஐஆர்சிடிசி இணையதளம் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முடியாதது என அறிவித்ததால் பயணிகள் அதிப்ருதி அடைந்தனர். அதிகாரிகள் விரைவில் இணையதள சேவையை மீண்டும் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?