மீண்டும் உச்சம்.. தங்கம் விலை சவரன் ரூ.87,000யைக் கடந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அக்டோபர் 1ம் தேதி மாதத்தின் முதல் நாள் புதன்கிழமை ஆயுத பூஜை நாளில் காலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் மூலம் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 2,000 அதிகரித்து ரூ. 87,000 ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 85,120 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், திங்கட்கிழமை ரூ. 86,160, செவ்வாய்க்கிழமை ரூ. 86,880 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ30 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ10890க்கும், சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 87,120 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. அதன்படி ஒரு கிராம் ரூ. 161க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 1,61,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
