கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஓராண்டுக்குள் உயிரிழப்பு!! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!!

 
மாரடைப்பு

2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா  உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.   சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியது.  மனிதர்கள் கொத்து கொத்தாக பலியாகினர்.
 தற்போது கொரோனாவுக்கான தேசிய மருத்துவ பதிவகம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் ஒரு பிரிவான இந்த அமைப்பு, கொரோனா பாதித்து, சிகிச்சை முடிந்து சென்ற நோயாளிகளிடையே ஓராண்டுக்கு பின்னர் நடைபெறும் மரணங்களுடன் தொடர்புடைய காரணிகளை மதிப்பீடு செய்துள்ளது. 

கொரோனா


இதன்படி, கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து சென்ற ஓராண்டு வரை அவர்களை   கண்காணித்து வந்துள்ளனர். 2020 செப்டம்பரில் இருந்து 2023 பிப்ரவரி வரை சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  கொரோனா பாதிப்புக்கு பிறகு நடைபெறும் திடீர் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  ரத்தம் உறைதல் ஏற்பட்டு, களைப்பு மற்றும் மூட்டு வலிகளுடன் மாரடைப்பும் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்பு இருதய பாதிப்புகளால் மரணம் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது.  நுரையீரல் பாதிப்பு, அதனால் சுவாச செயலிழப்பு, பூஞ்சை பாதிப்புகளான மியூக்கர்மைகோசிஸ்   சிக்கலான நிலைகளும் ஏற்படுகின்றன. நுரையீரல், சிறுநீரகம் ஆகியன முற்றிலும் செயலிழப்பதும் தொடர்ந்து வருகின்றன.  

மாரடைப்பு

 14,419 நோயாளிகளில் 942 பேர் உயிரிழந்துள்ளனர். இது 6.5 சதவீதம் ஆகும். இவர்களில் 325 பேர் பெண்கள். 616 பேர் ஆண்கள். இவர்களில் 175 பேர் (18.6 சதவீதம்) 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.  40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடையே இந்த மரண விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.  இதே பாதிப்புகளை கொண்ட 18 முதல் 45 வயது உடையவர்களுக்கும்   இதே நடைமுறை காணப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடையே உயிரிழப்பு   1.7 மடங்கு அதிகம். ஓராண்டுக்குள் எந்த நேரத்திலும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.   ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு, கொரோனாவுக்கு பின்னான மரணத்தில் இருந்து 60 சதவீத பாதுகாப்பு அதிகரித்திருப்பதும் உண்மையே.  தடுப்பூசிகள்  86 சதவீதம் அளவுக்கு தொடர்ந்து திறம்பட செயல்பட்டது என அந்த ஆய்வறிக்கை  தெரிவிக்கின்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web