மக்களே இந்த மாதிரி அழைப்புக்களை நம்பாதீங்க... முன்னாள் டிஜிபி எச்சரிக்கை!

 
சைலேந்திரபாபு

 
 
தொழில்நுப்ட வளர்ச்சி நாளுக்கு நாள் ஒருபுறம் வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்து வருவது பெரும் கவலையை தருகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் அந்த வகையில் சைபர் க்ரைம் மூலம் கணினி மற்றும் இணையதளங்களை  பயன்படுத்தி மக்களிடமிருந்து பணம் மற்றும் அவர்களுடைய முக்கியமான ஆவணத்தை பறித்து விடுகின்றனர்.

ஷேர் பங்குசந்தை சாப்ட்வேர் மென்பொருள் கம்ப்யூட்டர் சைபர் க்ரைம்

சைபர் கிரைமால் இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் எக்ஸ் டிஜிபி சைபர் க்ரைம் குறித்து  சில தகவல்களை வீடியோவாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது சில சைபர் க்ரைம் கும்பல் நூதனமான முறையில் மிரட்டி மக்களிடம் பணத்தை பறித்து விடுகின்றனர்.


சைபர் க்ரைம்

இதனைத் தொடர்ந்து சிலர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வெளிக்கொண்டு வர பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.   இதுபோன்ற தகவல்களை யாரும் நம்பவேண்டாம் காவல் துறையினரிடம் உடனே இது குறித்து  புகார் அளியுங்கள் எனக்  குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தான் சைபர் கிரைம் மோசடி கும்பல் தன்னுடைய புகைப்படத்தை வைத்து இந்தியர்களிடம் பணம் பறிக்கும் முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைவரும் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய நேரம் எனக்  குறிப்பிட்டுள்ளார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!