அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி!!

 
ஐ.பெரியசாமி

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. இவர் திடீர்  உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நேற்று காலை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் பெரியசாமிக்கு  திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில்  அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.  

ஐ.பெரியசாமி

மேல் சிகிச்சைக்காக  மதுரை   மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மருத்துவ வல்லுனர்கள் குழு   அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.  
 2008ல்  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடு செய்ததாக  2012ல்  அதிமுக ஆட்சியில்  லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப் பதிவு செய்தது.

ஐ.பெரியசாமி

சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை இந்த வழக்கில் இருந்து  விடுவித்தது.  இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!