அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
ஐ.பெரியசாமி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்   ஐ.பெரியசாமி. இவர்  2006 முதல் 2011 வரை தமிழகத்தில்  வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தவர். அமைச்சராக இருந்த போது தனது  அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு   ஒதுக்கியதாக   2012ல்   லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதாக  சென்னை  சிறப்பு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது .  இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டார்.  

ஐ.பெரியசாமி
அதன்படி விசாரணை நடைபெற்று வந்த நிலையில்  பிப்ரவரி 13ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்நிலையில், நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தர்.  இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார். அதன்படி  வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை  அதிரடியாக ரத்து செய்தார்.  இது குறித்து  இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறது.  மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை  மார்ச் 26 ம் தேதிக்குள் எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் . அதே போல்   மார்ச் 28க்குள்   சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்ச ரூபாய் காண பிணைத்தொகையை செலுத்த வேண்டும். தினமும் தொய்வின்றி  வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.  ஜூலை மாதத்திற்குள் விசாரணையை முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என  உத்தரவிட்டுள்ளார்

ஐ.பெரியசாமி

 அத்துடன் அவர் "வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை எல்லோரும்  வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மை. நான் இது போன்ற வழக்குகளில் ஆழமாகச் சென்று பார்க்கும் போது அடுத்தடுத்து  அதிகமான வழக்குகள் வெளியே வருகிறது. கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றுகிறது" என நீதிபதி ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!