பொதுமக்களுக்கு அனுமதி... இன்று முதல் ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொண்டாட்டம்.. கலந்து கொள்ளும் வழிமுறைகள்!

 
ஆளுநர்

இன்று செப்டம்பர் 22ம் தேதி நவராத்திரி விழா நடைபெறும் நிலையில்,  கிண்​டி ஆளுநர் மாளி​கை​யில் 'நவ​ராத்​திரி கொலு அக்​டோபர் 1ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்த கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைக்​கிறார்.

இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் தின​மும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடை​பெறும் வழி​பாடு நிகழ்ச்​சி​யிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடை​பெறும் கலாச்​சார நிகழ்ச்சி​களிலும் தனி​நபர்​கள், பொது​மக்​கள் மற்​றும் மாணவ, மாணவி​கள் பார்​வை​யாளர்​களாக கலந்​து ​கொள்​ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்​வ​முள்ள தனி​நபர்​கள், பொது​மக்​கள் மற்​றும் கல்வி நிறு​வனங்​கள் https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ என்ற இணை​யதள இணைப்பை பயன்​படுத்தி பதிவு செய்ய வேண்​டும். பதி​வில், தங்​கள் பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்​பேசி எண், மின்​னஞ்​சல் முகவரி, பார்​வை​யிட வரும் தேதி போன்ற விவரங்கள் இடம் பெற  வேண்​டும்.'முதலில் வருபவர்களுக்கே  முன்​னுரிமை' என்ற அடிப்​படை​யில் தின​ம் அதி​கபட்​சம் 200 பார்​வை​யாளர்​களுக்கு அனு​மதி வழங்​கப்​படும். 

ஆளுநர் மாளிகை

விண்​ணப்​​பதா​ரர்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள தேதி​யை​யும், நேரத்​தை​யும் மின்​னஞ்​சல் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பார்​வை​யாளர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள நேரத்​துக்கு குறைந்​தது 30 நிமிடங்​களுக்கு முன்​ன​தாக ஆளுநர் மாளிகைக்கு வந்​தடைய வேண்​டும்.

உங்களுக்கு அனுப்​பப்​பட்ட உறு​திப்​படுத்​திய மின்​னஞ்​சலின் நகல் மற்​றும் அசல் புகைப்பட அடை​யாளச் சான்றை கொண்டு வர வேண்​டும். ஆர்​வ​முள்ள வெளி​நாட்​டினரும் 'நவ​ராத்​திரி கொலு 2025' கொண்​டாட்​டங்​களில் கலந்​து​ கொள்​ளலாம் அவர்​களின் அசல் பாஸ்​போர்ட் மட்​டுமே அடை​யாளச் சான்றாக ஏற்​றுக்​ கொள்​ளப்​படும்​.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?