சூப்பர்... 2 நாட்களில் வாகனங்களில் பெர்மிட்!
தமிழகம் முழுவதும் மொத்தம் 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், யூனிட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் 2,000க்கும் மேற்பட்டோர், புதிய, 'பர்மிட்' பெற விண்ணப்பித்து வருகின்றனர். இதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் விண்ணப்பித்து பெற வேண்டியுள்ளது.
பர்மிட் வாங்க குறைந்தது ஏழு முதல் 10 நாட்கள் வரை ஆகின்றன. இந்த வசதியையும் ஆன்லைனில் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆட்டோ, கால் டாக்சி, மினி வேன், பேருந்து போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கான பர்மிட், ஆன்லைனில் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் வாகனங்களுக்கான பர்மிட் 2 நாளில் பெரும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தற்போது வாகனங்களுக்கு பர்மிட் வாங்குவதற்கு குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை ஆகின்றது. இதனை சுருக்கி 2 நாட்களில் அனுமதி பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்நிலையில் ஆட்டோ, கால் டாக்ஸி, மினி வேன் மற்றும் பஸ் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கான ஆவணங்களை tnsta.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அத்துடன் வாகனங்களுக்கு 2 நாட்களில் பர்மிட் பெரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!