இந்தியாவில் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ செயலி அதிக பதிவிறக்கம் சாதனை!

 
ஏஐ

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகளவில் மாற்றங்களை நிகழ்த்தும் நிலையில், இந்திய வம்சாவளி இணை நிறுவனர் அரவிந்த் சீனிவாஸ் தலைமையிலான பெர்ப்ளெக்சிட்டி செயலி, இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த சில தினங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் ‘அரட்டை’ செயலி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது, ஆனால் பெர்ப்ளெக்சிட்டி தற்போது அதிக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக மாறியுள்ளது.

ஏஐ டூல்களின் பயன்பாடு தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், பெர்ப்ளெக்சிட்டி சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி போன்ற செயலிகளை பின்னுக்கு தள்ளி, இந்திய பயனர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை பெர்ப்ளெக்சிட்டி இணை நிறுவனர் அரவிந்த் சீனிவாஸ் தனது எக்ஸ்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சிகளால், ‘அரட்டை’, ‘பெர்ப்ளெக்சிட்டி’ போன்ற செயலிகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், ஏர்டெல் நிறுவனம் பெர்ப்ளெக்சிட்டி வருடாந்திர சந்தாவை ஒரு ஆண்டுக்கான இலவசமாக வழங்கியதால், பயனர்கள் இதனை சாட்ஜிபிடி, ஜெமினியை விட எளிதாகவும் பயனுள்ளதாகவும் கருதுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?