சொந்த வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீச்சு!! சகோதரர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!

கும்பகோணம் துக்காச்சி கிராமத்தில் வசித்து வருபவர் அலாவுதீன். இவருக்கு வயது 70. இவருக்கு சுல்தான், அப்துல் சமத் என இரு மகன்கள். இவர்கள் வீட்டில் திடீரென நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உடனே வெளியில்சென்று பார்த்ததில் வீட்டின் முன்பக்கம் உள்ள காலி இடத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்த இடத்தில் காலி மதுபான பாட்டில்கள் சிதறியும் கிடந்தன. இதனையடுத்து காவல் நிலையம் சென்ற அலாவுதீன், தன் வீட்டில் யாரோ ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அலாவுதீன் வீட்டில் கிடந்த மதுபாட்டில்கள் மற்றும் திரிக்காக பயன்படுத்தப்பட்ட செய்தித்தாளின் காகிதம் அனைத்தையும் சேகரித்துக் கொண்டனர். மேலும் வீட்டின் பின்னால், இருந்த செடிகளுக்கு இடையில் ஒரு கேனில் பெட்ரோலும், செய்தித்தாள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டெடுத்த 2 செய்தித்தாளும் ஒரே தேதி, ஒரே நிறுவனம். சந்தேகமடைந்த போலீசார் சுல்தான், அப்துல் சமத் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அலாவுதீன் வீட்டின் முன்பகுதியில் இரண்டு பேர் குடியிருந்து வருகின்றனர். அவர்களை நீண்ட நாட்களாக வீட்டை காலி செய்ய சொல்லியும், அடாவடியாக அவர்கள் காலி செய்ய மறுத்து விட்டனர். அவர்களை போலீஸில் சிக்க வைத்து, வீட்டை காலி செய்ய வைக்க சுல்தான் மற்றும் அப்துல் சமத் இருவரும் தங்கள் வீட்டின் மீது தாங்களே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு நாடகமாடியுள்ளனர். இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!