அதிர்ச்சி... பரோட்டா தராததால் உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்... !

 
பரோட்டா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையத்திற்கு அருகே அல்புஹாரி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில்  ஜனவரி 18ம் தேதி விருதுநகர் மாவட்டம் அம்மன் பட்டியில் வசித்து வரும்   முத்துக்குமார்   என்ற இளைஞர் பரோட்டா சாப்பிட வந்தார்.   ஹோட்டலில் அனைத்து உணவுகளும் காலியானதால் கடையின் உரிமையாளர் ஷேக் அப்துல்லா சாப்பிட எதுவும் இல்லை என இளைஞரிடம் கூறிவிட்டார்.   அதற்கு அந்த இளைஞர் "பரோட்டா கொடுக்கவில்லை என்றால் கடையை எரித்து விடுவேன்" என மிரட்டல் விடுத்துள்ளார்.
 பரோட்டா
இச்சம்பவம்  குறித்து ஹோட்டல் உரிமையாளர், கமுதி காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்துள்ளார். இதனைக் கேட்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார்  .  இந்நிலையில் கமுதி போலீசார், தன்னைத் தேடுவதை அறிந்த முத்துக்குமார் நேற்று இரவு பிளாஸ்டிக் பையில் பெட்ரோல் வாங்கி அதில் தீ வைத்து அல் புஹாரி கடையின் மீது வீசி சென்றுவிட்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பரோட்டா மாஸ்டர் வேலுவுக்கு  முகத்தில் காயம் ஏற்பட்டது.  அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பரோட்டா


இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்  முத்துக்குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டு பேசிய போது   21ம் தேதி நடைபெற்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர், 25ம் தேதிதான் சிசிடிவி காட்சிகளுடன் புகார் கொடுத்தார். 26 ம் தேதி மாவட்டம் முழுவதும் தேடி 4 நபர்களைக் கைது செய்தோம். 27ம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.  பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுக்கு வேண்டும் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக காவல்துறை சம்பவ இடத்திற்கே வந்து நடவடிக்கை எடுப்பார்கள். பொதுமக்களும், வர்த்தகர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web