மாட்டுவண்டியில் போவோமா ஊர்கோலம் ... புதுமணத் தம்பதி போட்டோஷூட்....!!

 
மாட்டுவண்டி

உலகம் முழுவதும்  திருமண போட்டோ ஷூட்கள் மற்றும் போஸ்ட் மற்றும் ஃப்ரீ வெட்டிங் சூட்கள் விதவிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பெரும் பொருளும், நேரமும் செலவானாலும் வாழ்வில் ஒரே முறை தான். நல்லா  ஜாலியாக இருக்கணும், அழகா தெரியணும் என்பது தான் மணமக்களின் குறிக்கோள்.  வித்தியாசமான முறையில் எடுக்கப்படும்   புகைப்படங்கள், வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.சமீபகாலமாக இந்தியாவிலும் இது போன்ற வெட்டிங் ஷூட்கள் பரவலாகி வருகிறது.

புதிதாக திருமணம் செய்பவர்கள் இதற்காகவே  வித்தியாசமான முறையில் போட்டோக்களை எடுத்து குவிக்க ஆர்வம் காட்டுகின்றனர். சிலர், பாரம்பரிய முறைப்படி, திருமண நாளில் மாட்டுவண்டி, குதிரை வண்டிகளில் பயணிக்கின்றனர்.  வாழ்நாளில் நிகழும் முக்கிய நிகழ்வான திருமணத்தை மறக்கவே முடியாத நாளாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவையில், திருமணம் முடிந்ததும் மணமக்கள்  மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றனர். இச்சம்பவம் சுற்றுவட்டாரங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  
முகூர்த்த நாள் என்பதால் கோவை ஈச்சனாரி கோயிலில்  பல திருமணங்கள் நடைபெற்றன.

மாட்டுவண்டி

இதில் கோவை செட்டிபாளையம் பகுதியில் வசித்து வரும்  ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர், வித்தியாசமான முறையில் ஊர்வலம் செல்ல தம்பதிகள் முடிவு செய்தனர்.  இதனையடுத்து புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் செட்டிபாளையத்தில் உள்ள ஆனந்த் வீட்டுக்கு, ஈச்சனாரி கோயிலில் இருந்து மாட்டுவண்டியில் சென்றனர். மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதியினரை, சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர் .
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மணமக்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!