சில்லு சில்லாய் சிதறிய பாட்டில்கள்... கூல்டிரிங்க்ஸ் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

 
விபத்து

திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குளிர்பானங்கள் ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து

இன்று காலை திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் இருக்கும் தனியார் ஆலை ஒன்றில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிக் கொண்டு ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று விபத்திற்குள்ளானது. லாரியை தூத்துக்குடி மாவட்டம் கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்த சேட்டையன் (41) என்பவர் ஓட்டிச் சென்றார். 

திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை வந்து, அங்கிருந்து தேசிய நான்கு வழிச்சாலையில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலை முழுவதும் குளிர்பான பாட்டில்கள் சிதறியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து

விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற எட்டயபுரம் போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web